close
Choose your channels

17 படங்கள், 17 இயக்குனர்கள்: வித்தியாசமான சாதனை செய்த கார்த்தி

Saturday, October 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தி இதுவரை 16 படங்களில் நாடித்து முடித்துள்ளார். தற்போது அவரது 17வது படமான 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் கார்த்தி இதுவரை நடித்துள்ள 17 படங்களிலும் 17 வெவ்வேறு இயக்குனர்களிடம் பணிபுரிந்துள்ளார். ஒருமுறை பணிபுரிந்த இயக்குனருடன் அவர் மீண்டும் இதுவரை பணிபுரியவில்லை என்பது குறிப்ப்பிடத்தக்கது. இது தமிழ் சினிமாவில் எந்த ஹீரோவும் செய்யாத வித்தியாசமான சாதனையாக கருதப்படுகிறது.

அமீர் இயக்கிய 'பருத்திவீரன்' படத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமான கார்த்தி இந்த 14 வருடங்களில் செல்வராகவன், லிங்குசாமி, சிவா, சுசீந்திரன், வெங்கட்பிரபு, பா.ரஞ்சித், முத்தையா, மணிரத்னம், பாண்டிராஜ் என முன்னணி இயக்குனர்கள் படத்தில் அவர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.