கார்த்தியின் 17வது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இதோ

  • IndiaGlitz, [Thursday,October 25 2018]

இன்று காலை தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் செகண்ட்லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் முடியாத நிலையில் சற்றுமுன் கார்த்தி நடித்து வரும் 17வது படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்துள்ளது.

பிரபல நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா, இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளார். இதன்படி இந்த படத்திற்கு ஏற்கனவே கூறியபடி 'தேவ்' என்ற டைட்டில் தான் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் கார்த்தி, மோட்டார் சைக்கிள் அருகே கையில் ஹெல்மெட்டுடன் ஒரு கூரிய பார்வையுடன் நின்று கொண்டுள்ளார்

ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், மற்றும் நவரச நாயகன் கார்த்திக் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.