close
Choose your channels

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் விபரங்கள்

Monday, January 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் நடிப்பில் கார்த்தி நடித்து வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழர் திருநாளில் இந்த ஃபர்ஸ்ட்லுக்கை இந்த படத்தின் தயாரிப்பாளரும், கார்த்தியின் சகோதரருமான சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

விவசாயி பிரச்சனை மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கலந்த இந்த படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் 40% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், மீதி படப்பிடிப்பையும் விரைவில் முடித்து, வரும் ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா சாய்கல் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் மேலும் முக்கிய வேடங்களில் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா, மற்றும் பலர் நடித்து வருகின்றனர். D.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாவது லுக் மிக விரைவில் வெளிவரவுள்ளதாகவும், அதில் இந்த படத்தின் குறித்த மேலும் சில தகவல்கள் வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.