close
Choose your channels

'கைதி' படத்தின் அடுத்த அப்டேட்!

Thursday, October 17, 2019 • தமிழ் Comments

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தீபாவளிக்கு வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ள தளபதி விஜய்யின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ’கைதி’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை இன்னும் இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும்  அறிவிக்கவில்லை 

விஜய்யின் பிகில் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் என்று பரவலாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு பின்னரே இந்த தேதி உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அனேகமாக இன்று மாலை 5 மணிக்கு ’கைதி’ படத்தின் ரிலீஸ் தேதியை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz