கார்த்தியின் 'சர்தார் 2' இசையமைப்பாளர் மாற்றப்படுகிறாரா? யுவனுக்கு பதில் யார்?


Send us your feedback to audioarticles@vaarta.com


கார்த்தி நடித்து வரும் ‘சர்தார் 2’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ‘சர்தார் ’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியானதில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையில், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம், வரும் மே மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ‘சர்தார் 2’ படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மாற்றப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், படக்குழுவினர் இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments