close
Choose your channels

வசூலில் புதிய மைல்கல்லை எட்டிய கார்த்தியின் 'சர்தார்': அதிகாரபூர்வ அறிவிப்பு!

Monday, November 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்த ‘சர்தார்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு இந்த படத்தின் படத்தயாரிப்பாளர் ஆடம்பர கார் ஒன்றை பரிசாக அளித்தார். இது குறித்த புகைப்படங்கள் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் நல்ல வசூலை செய்து வந்த நிலையில் தற்போது இந்த படம் ரூ.100 கோடி வசூல் என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். மேலும் 100 கோடி வசூல் செய்ததை அடுத்து இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கார்த்தி நடித்த ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ ஆகிய மூன்று படங்களும் வெற்றி பெற்றதை ஹாட்ரிக் வெற்றியை கார்த்தி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இரண்டு வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை லைலா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.