அடுத்தகட்ட பணியை தொடங்கிய 'சுல்தான்' படக்குழு: கார்த்தி ரசிகர்கள் குஷி!
கார்த்தி நடிப்பில் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில் உருவாகி வந்த’சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை கார்த்தி தனது டுவிட்டரில் உறுதி செய்தார் என்ற செய்தியை பார்த்தோம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த படத்தின் கதையை நாங்கள் கேட்ட நாள் முதல் இன்று வரை எங்களை இந்த கதை ஆச்சரியப்படுத்தி வருவதாகவும், எங்களை உற்சாகப்படுத்தி நல்லபடியாக படத்தை முடிக்க உதவிய குழுவினர் அனைவருக்கும் நன்றி என கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘சுல்தான்’ படத்தின் எடிட்டிங் பணிகள் சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் இன்று முதல் ‘சுல்தான்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. கார்த்தி தனது பகுதியின் டப்பிங் பணியை இன்று முதல் தொடங்கிவிட்டார். இதனையடுத்து விரைவில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்பதால் கார்த்தி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.