close
Choose your channels

கார்த்தியின் அடுத்த படத்தின் ரிலீஸ் எப்போது?

Thursday, January 16, 2020 • தமிழ் Comments

கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு தேவ், கைதி மற்றும் தம்பி ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியானது. இதில் கைதி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தற்போது கார்த்தி, ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஆனால் இதற்கு முன்பு அவர் ’சுல்தான்’ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார் என்பதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ளார் என்பதும் தெரிந்ததே.

’சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஜெயம் ரவியின் ’பூமி’ திரைப்படம் மே 1ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz