ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்ட கார்த்தியின் சூப்பர்ஹிட் படம்: டிரைலர் ரிலீஸ்!

பிரபல நடிகர் கார்த்தி நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம் ஒன்று ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தின் டிரைலர் தற்போது ரிலீசாகி உள்ளது.

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’கைதி’. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ஒரு சில இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கைதி’ படத்தை ரஷ்ய மொழியில் டப் செய்து உள்ள நிலையில் அந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ட்ரெய்லர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது .

இந்த படத்தின் கதை மற்றும் காட்சி அமைப்புகள் சர்வதேச தரத்தில் உள்ளது மட்டுமின்றி ஹாலிவுட் படங்களை போலவே பாடல்கள், ரொமான்ஸ் காட்சிகள் இன்றி இன்னும் சொல்லப்போனால் நாயகினே இன்றி முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த படம் ரஷ்ய மொழியிலும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.