close
Choose your channels

கார்த்தியின் சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்.. பிப்ரவரி 2ஆம் தேதி படப்பிடிப்பு தொடக்கம்?

Sunday, January 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் கடந்த சில மாதங்களாக வெளியாகி கொண்டிருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் அதன் பின் தொடர்ச்சியாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் பாகத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்க இருப்பதாகவும் முதல் பாகத்தில் நடித்த சில நட்சத்திரங்களும் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் பிப்ரவரி 2ஆம் தேதி பூஜை தினத்தில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.