close
Choose your channels

கார்த்தியின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்

Friday, November 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, ஜோதிகா இணைந்து நடித்த ‘தம்பி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட்லுக் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் டீசர், டிரைலரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

கமலஹாசன் நடித்த ’பாபநாசம்’ படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ’96’ படத்தின் மூலம் மிகப்பெரிய புகழ்பெற்ற கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். கார்த்தி, ஜோதிகா அக்கா-தம்பியாக நடித்துள்ள இந்த படத்தில் இவர்களின் தந்தை கேரக்டரில் சத்யராஜ் நடித்துள்ளார்.

கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.