கார்த்தியின் 'காஷ்மோரா' வியாபாரம் தொடங்கியது

  • IndiaGlitz, [Monday,August 08 2016]

கோலிவுட் திரையுலகில் பல தரமான படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ். இந்த நிறுவனம் விரைவில் தனது 100வது படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள நிலையில் தற்போது கார்த்தி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பெரிய பட்ஜெட் படமான 'காஷ்மோரா' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ், விவேக், சித்தார்த் விபின், மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் பிரமாண்டமான செட்களில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் வியாபாரம் ஆரம்பித்துள்ளது. இந்த படத்தின் தமிழக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தெலுங்கு மாநில ரிலீஸ் உரிமை குறித்த வியாபாரம் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தை போலவே கார்த்தி மற்றும் நயன்தாராவின் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் மிகப்பெரிய தொகைக்கு இந்த படத்தின் தெலுங்கு வியாபாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவும் சாபு ஜோசப் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

More News

'ஆட்டைக்கு ரெடியா'. சிம்புவுடன் இணைந்த 'கபாலி' பாடகர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ...

திருமண வதந்தி குறித்து ஸ்ருதிஹாசனின் மெச்சூரிட்டி பதில்

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது மிகவும் பிசியான நடிகைகளில்...

Sasi's big reentry with a big star

Director Sasi who has given commercial super hits and critically acclaimed Tamil films so far is all set to make a big bang reentry after many years in Tollywood ...

'கபாலி'யின் மூன்றாவது வாரம் சென்னை வசூல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி வசூலில் உலக அளவில் பல சாதனைகளை செய்து கொண்டு வருகிறது...

இன்று நண்பர்கள் தினம்: தமிழ் சினிமாவில் நட்பின் பெருமை குறித்து ஒரு பார்வை

உலகம் முழுவதும் இன்று 'நண்பர்கள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் என ஒரு மனிதனுக்கு பல்வேறு உறவு முறைகள் இருந்தாலும் இவர்களிடம் சொல்ல முடியாத ஒருசில விஷயங்களை மனம்விட்டு பகிர உதவும் ஒரு புனிதமான உறவுதான் நட்பு.