close
Choose your channels

இன்று 297 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் கார்த்தி திரைப்படம்!

Thursday, May 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்த திரைப்படம் இன்று 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகரான கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வசூலை வாரி குவித்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது ரஷ்யாவில் இன்று ரிலீஸ் ஆகிறது. ரஷ்யாவில் 121 நகரங்களில் 297 திரை அரங்குகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது போல் ரஷ்யாவிலும் நல்ல வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

’கைதி’ திரைப்படம் ஏற்கனவே ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்பதும் கார்த்தி கேரக்டரில் அஜய்தேவ்கான் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த படம் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் கார்த்தி வேடத்தில் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.