''தோழா'' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

  • IndiaGlitz, [Thursday,February 18 2016]
கார்த்தி முதன்முதலாக நாகார்ஜூனனுடன் இணைந்து நடித்த 'தோழா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சற்று முன்னர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

'தோழா' படத்தின் டீசர் வரும் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழுவினர் டீசர் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கார்த்தி, நாகார்ஜூனன், தமன்னா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் அனுஷ்கா மற்றும் ஸ்ரேயா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார்.கோபிசுந்தரின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.