close
Choose your channels

கார்த்தியின் அடுத்த பட நாயகி சமந்தாவா? எந்த படத்தில் தெரியுமா?

Sunday, January 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தியின் அடுத்த படத்தில் நடிகை சமந்தா நாயகி என்றும் இந்த படம் தமிழ், தெலுங்கில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது ’விருமன்’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும், தற்போது அவர் ’சர்தார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கியிருப்பவர் சதீஷ் செல்வகுமார் என்றும் இவர் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த ‘பேச்சிலர்’ என்ற வெற்றி படத்தை இயக்கினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் தேர்வு கூட நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக சமந்தா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவரிடம் இயக்குனர் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.