close
Choose your channels

இன்று கார்த்தியின் புதிய அத்தியாயம் தொடக்கம்

Thursday, November 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்திக் நடித்த 'தீரன் அத்தியாயம் ஒன்று' படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்து வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த அத்தியாயம் அதாவது அடுத்த படம் இன்று முதல் தொடங்குகிறது.

கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜை விழாவில் கார்த்தி, பாண்டிராஜ், சூர்யா, சிவகுமார், சத்யராஜ், ஸ்ரீமான், பொன்வண்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர். சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது. இந்த படம் இந்த நிறுவனத்தின் ஐந்தாவது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக 'வனமகள்' நாயகி சாயிஷா நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.