14 வருடங்கள் ஆனபின்னர் இன்னும் பேசுகிறார்கள்: கார்த்தி பெருமிதம்!

  • IndiaGlitz, [Monday,October 25 2021]

தனது வெற்றி பெற்ற படம் ஒன்றினை குறித்து 14 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் மதுரை மக்கள் பேசுகிறார்கள் என்று தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ’விருமன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த திரைப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது மதுரையில் தொடங்கியுள்ளது. இதற்காக மதுரை சென்று உள்ள கார்த்தியை மதுரை மக்கள் மிகுந்த அன்புடனும் பாசத்துடனும் வரவேற்றுள்ளதாகவும், மேலும் 14 ஆண்டுகளுக்கு முன் வெளியான ’பருத்தி வீரன்’ படத்தை பற்றி இப்பொழுதும் அவர்கள் பேசுகிறார்கள் என்று மதுரை மக்களின் அன்பும் அரவணைப்பும் இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது என்றும் இதனை பார்க்கும் போது மதுரை மக்களை மிகவும் நன்றி உள்ளவர்களாக உணர்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

விருது பெற்றும் ஆதங்கத்தை வெளியிட்ட பார்த்திபன்!

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படத்திற்கு சிறந்த சவுண்ட் எபக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான விருதுகள் கிடைத்த நிலையில் தனது ஆதங்கத்தை பேட்டி ஒன்றின் மூலம்

ஆர்யா படத்தில் இணைந்த சிம்ரன்: சென்னையில் இன்று பூஜை!

ஆர்யா நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த படம் வெற்றியடைய நடிகை சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

சர்ச்சை ஏற்படுத்த வேண்டுமென்றால் முன்கூட்டியே கூறிவிடுங்கள்: நிருபருக்கு விராத் பதிலடி

டி20 கிரிக்கெட் போட்டியின் ஓபனராக ரோகித் சர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷானை நீங்கள் களமிறக்க முயற்சி செய்வீர்களா என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, விராத் கோஹ்லி கொடுத்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விஜய்யை நேரில் சந்தித்த 115 கவுன்சிலர்கள்! அடுத்தகட்ட அரசியலா?

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டதில் கிராம ஊராட்சி பதவிகளுக்கு

கார் நுழைவு வரி வழக்கு: சூர்யா, தனுஷூக்கும் ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடிய விஜய்!

தளபதி விஜய்யின் ஆடம்பர கார் வரி குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தனக்கு மட்டுமின்றி சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர்களுக்காகவும் விஜய் தரப்பில் விஜய் தரப்பில் வாதாடிய