close
Choose your channels

'அந்த ஆறு பேருமே ஒருத்தன் தான்.. கார்த்தியின் 'சர்தார்' டீசர்

Thursday, September 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தி,ல் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சர்தார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

தமிழகத்தில் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்யவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டீசர் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

வில்லன் குரூப் தேடிக்கொண்டிருக்கும் நபர் தான் கார்த்தி என்றும், அந்த ஆறு பேரில் ஒருவர் தான் கார்த்தி என்பதையும் வில்லனின் ஆட்கள் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் வில்லனோ அந்த ஆறு பேருமே அவன் தான் என்றும், அவனுக்கு ஒரு கோட் நேம் உள்ளது என்றும், அதுதான் சர்தார் என்றும் கூறுவதுடன் இந்த டீசர் முடிவுக்கு வருகிறது

பிஎஸ் மித்ரனின் முந்தைய படங்களான ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ போலவே இந்த படத்திலும் நவீன டெக்னாலஜி மூலம் கதை சொல்லும் பாணியை அவர் தேர்வு செய்துள்ளார் என்பதும் இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாக்கிய இந்த படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.