கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' குறித்த முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,January 05 2016]

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரண்டே படத்தின் வெற்றியின் மூலம் ரஜினி, விஜய் படங்களை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்ற பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது இயக்கி முடித்துள்ள படம் 'இறைவி'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (ஜனவரி 6) வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.


விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள 'இறைவி' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

அஜித்துக்கு ரசிகராக மாறிய பிரபல மலையாள நடிகர்

தல அஜித்தின் பெயர் மற்றும் படக்காட்சிகளை தங்கள் படங்களில் பயன்படுத்தி புரமோஷன் செய்யும் கோலிவுட் நடிகர்கள் பலரை நாம் பார்த்துள்ளோம்....

ஜெயம் ரவியின் 'மிருதன்' ரிலீஸ் தேதி?

கடந்த 2015ஆம் ஆண்டில் நான்கு வெற்றி படங்களை கொடுத்த ஜெயம் ரவியின் அடுத்த படமான 'மிருதன்' தமிழில் வெளிவரும் முதல் 'ஜோம்பி' படம் என்று...

பொங்கலுக்கு உதயநிதி தரும் டபுள் ட்ரீட்

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன் நடித்த 'கெத்து' படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது...

தற்காப்புக்காக பி.வாசு எழுதிய கடிதம்

கோலிவுட்டின் பிரபல இயக்குனர் பி.வாசு கடந்த பல வருடங்களாக வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே...

'மிருதன்' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

கடந்த வருடம் ரோமியோ ஜூலியட், சகலகலாவல்லவன், தனி ஒருவன் மற்றும் பூலோகம் என நான்கு வெற்றி படங்களை கொடுத்து 2015ஆம் ...