கார்த்தியின் தோழா'வுக்கு கிடைத்த முதல் வெற்றி

  • IndiaGlitz, [Monday,February 22 2016]
மெட்ராஸ், கொம்பன் ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் கார்த்தியின் அடுத்த படமான 'தோழா' படமும் ஹிட்டானால் கோலிவுட்டில் ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்த ஹீரோ பட்டியலில் கார்த்தியும் இணைந்துவிடுவார்.
இந்நிலையில் இந்த படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'U' சர்டிபிகேட் அளித்ததோடு, படக்குழுவினர்களையும் பாராட்டியதாக செய்தி வெளிவந்துள்ளது.

சென்சாரில் 'U' சர்டிபிகேட் கிடைத்ததை அடுத்து இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது., இதுவே இந்த படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது.
'பையா' படத்திற்கு பின்னர் மீண்டும் கார்த்தியுடன் இந்த படத்தில் தமன்னா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஸ்ரேயா ஆகியோர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகின்றனர்.
கோபிசுந்தர் இசையமைப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பிவிபி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

More News

அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஆசை. பிரபல ஹீரோ

'மிருகம்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'ஈரம்', 'அரவான்', 'யாகாவாராயினும் நா காக்க' போன்ற பல படங்களில் நடித்த கோலிவுட்டின் இளம் நாயகன்...

ஹாலிவுட்டுக்கு செல்லும் ஜெயம் ரவி திரைப்படம்

தமிழின் முதல் ஜோம்பி திரைப்படமான 'மிருதன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை...

4 மணி நேரம் மேக்கப் போட செலவழித்த 'ரெமோ' சிவா

'ரஜினிமுருகன்' சூப்பர் ஹிட் படத்தை அடுத்து தற்போது 'ரெமோ' என்ற படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இதுவரை இல்லாத...

தர்மதுரை இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தமன்னா

'நானும் ரெளடிதான், 'சேதுபதி' என இரண்டு தொடர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த விஜய்சேதுபதி தேசிய விருது இயக்குனர் சீனுராமசாமியின்..

அனிருத்தின் 'ரம்'முக்கு ஐஸ்வர்யா தனுஷ் வாழ்த்து

கடந்த சில நாட்களுக்கு முன் 'பீப்' பாடல் விவகாரத்தில் சிக்கியிருந்த அனிருத் கிட்டத்தட்ட அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்துள்ள...