'தோழா'வுக்கு ஓகே சொல்வாரா அமிதாப்பச்சன்?

  • IndiaGlitz, [Friday,April 15 2016]

கார்த்தி, தமன்னா, நாகார்ஜூனா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தோழா' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்தியின் மிக அதிகமான வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்ற இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண்ஜோஹர் இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படம் முழுக்க சக்கர நாற்காலியில் உட்கார்ந்தே மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்திய நாகார்ஜூனா கேரக்டரில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாகவும், கார்த்தி வேடத்தில் வருண் தவான் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும், தமிழ்,தெலுங்கை போலவே இந்தியிலும் இந்த படம் பெரும் வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது.