'மகரிஷி' நாயகனை சந்தித்த 'தேவ்' நாயகன்

  • IndiaGlitz, [Wednesday,February 13 2019]

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படம் நாளை காதலர் தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதால் இந்த படத்தின் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மகேஷ்பாபு நடித்து வரும் 'மகரிஷி' படத்தின் படப்பிடிப்புக்கு திடீர் விஜயம் செய்த கார்த்தி, மகேஷ்பாபுவையும் படக்குழுவினர்களையும் சந்தித்து பேசினார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

மகேஷ்பாபுவின் 'மகரிஷி' படத்தை இயக்கி வரும் இயக்குனர் வம்சி, கார்த்தி-நாகார்ஜூனன் நடித்த 'தோழா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் தோழா கூட்டணி இணையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

பிப்ரவரி 22ல் வெளியாகும் படங்கள் குறித்து ஒரு பார்வை;

ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் மூன்று தமிழ் சினிமாக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் வரும் 22ஆம் தேதி ஐந்து திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

2ஆம் பாகமாக உருவாகும் பிரசன்னாவின் வெற்றிப்படம்

பிரசன்னா, லைலா நடிப்பில் பிரியா இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'கண்ட நாள் முதல்'.

இன்று முதல் அடுத்த கட்டத்திற்கு செல்லும் தனுஷின் 'அசுரன்'

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

சிம்புவின் 'மாநாடு' படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ!

சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் சிம்புவின் தீவிர ரசிகர்களை மட்டும் திருப்தி செய்த நிலையில் அவருடைய அடுத்த படமான 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

சூர்யாவின் 'என்.ஜி.கே' ரன்னிங் டைம் குறித்த தகவல்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட மற்ற தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில்