கார்த்தியின் அடுத்த படத்தில் காத்திருக்கும் ஆச்சரியம்

  • IndiaGlitz, [Tuesday,March 13 2018]

கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'கடைக்குட்டி  சிங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரித்தி சிங் நடிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தில் சீனியர் நட்சத்திரங்களான நவரச நாயகன் கார்த்திக், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர் என்பது ஒரு ஆச்சரியமான தகவல். இவர்கள் இருவரும் சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது.

More News

அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்காதது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலைக்கு கிளம்பியபோது அவரிடம் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ரஜினிகாந்த் சென்றுவிட்டார்.

சூர்யாவின் 37 வது படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது

சூர்யாவின் முப்பத்தி ஏழாவது படத்தை இயக்குனர் கே வி ஆனந்த் இயக்குகிறார் அவரே வெளியிட்ட அதிகாரபூர்வமான அறிவிப்பின்படி இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை

மீண்டும் பொது இடத்தில கவர்ச்சி அதிர்ச்சி தந்த முன்னணி நடிகை

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே தமிழிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சைடையான் படத்தில் நடித்திருக்கிறார். இவர்

சத்யராஜின் எச்சரிக்கைக்கு 12 மணி நேரம் மட்டுமே கெடு

சத்யராஜ் நடிப்பில் சர்ஜூன், இயக்கியுள்ள 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

காலவரையற்ற வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு

மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை என்ற அறிவிப்பை ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. மேலும் போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்ளிட்ட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.