கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த பட ஹீரோ இவரா?

  • IndiaGlitz, [Thursday,August 26 2021]

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’மாறன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கார்த்திக் நரேன் அதன்பின்னர் அரவிந்த்சாமி நடித்த ‘நரகாசுரன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் ஒருசில காரணங்களால் வெளியாகாத நிலையில் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அருண் விஜய் நடித்த ‘மாஃபியா’ என்ற திரைப்படத்தை இயக்கிய அவர் தற்போது தனுஷ் நடித்துள்ள ’மாறன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ’மாறன்’ படத்தை முடித்துள்ள கார்த்திக் நரேன் அடுத்ததாக ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதர்வா தற்போது குருதி ஆட்டம், 8 தோட்டாக்கள், தள்ளிப்போகாதே ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்பு மீதான ரெட் கார்ட் குறித்து தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு!

சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் விதித்து இருந்ததை அடுத்து தற்போது அந்த ரெட் கார்ட் மீது தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஹைக்கூ கவிதையுடன்....! அப்பா ஆன நெகிழ்வை பதிவிட்ட பிரபல சீரியல் நடிகர்....!

சன் தொலைக்காட்சியில் வெளியான வம்சம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகர் சசிந்தர்

கேப்டன் என்பது ஒரு மந்திரசொல்: விஜய்காந்த் குறித்து அம்மா கிரியேஷன்ஸ் சிவா

கேப்டன் விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் 'சார்பாட்டா பரம்பரை': ரசிகர்கள் மகிழ்ச்சி

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது

நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்: இணையத்தில் வைரல்

நடிகை அமலாபால் வெளியிட்ட நிச்சயதார்த்த புகைப்படம் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.