செக்க சிவந்த வானம்: 5 மணி காட்சிக்கு டிக்கெட் புக் செய்த இயக்குனர்

  • IndiaGlitz, [Wednesday,September 26 2018]

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய் நடித்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. சென்னையில் பல திரையரங்குகளில் அதிகாலை 5 மணி முதல் காட்சிகள் ஆரம்பமாகின்றன.

இந்த நிலையில் முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 'துருவங்கள் 16' மற்றும் 'நரகாசுரன்' படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் நரேன், 'செக்க சிவந்த வானம்' படத்திற்கு அதிகாலை காட்சிக்கு டிக்கெட் புக் செய்துள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கோயம்பேடு அருகில் உள்ள ஒரு திரையரங்கிற்கு நாளை சிம்புவின் நண்பரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளருமான மகத், அதிகாலை காட்சியை காண வருவதாக கூறப்படுகிறது. சிம்பு ரசிகர்கள் பெரும்பாலான திரையரங்குகளில் கட் அவுட் வைப்பதில் இப்போதில் இருந்தே ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.