இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ? ரஜினி பட இயக்குனர் டுவீட்

  • IndiaGlitz, [Tuesday,December 03 2019]

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்ததால் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த விபத்துக்கு காரணமான சுற்றுச்சுவர் உள்ள வீட்டுக்கு சொந்தக்காரர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

இந்த நிலையில்  மேட்டுப்பாளையம் சுற்றுச்சுவர் விபத்தில் பலியான 17 பேர்களின் உடல் இன்று ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது. பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் 

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் சுற்றுச்சுவர் சம்பவத்திற்கு பல திரையுலக பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’  உள்பட ஒரு சில வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை வாங்குமோ?? என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் 17 உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்து மனம் மிகவும் வேதனையடைகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்


More News

22 வயது இளைஞனிடம் சிக்கிய 9ஆம் வகுப்பு மாணவி: மெரீனாவில் நடந்த கொடூரம்

சென்னை மெரினா கடற்கரையில் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவரை 22 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பசியின் கொடுமையால் மணலை சாப்பிட்ட குழந்தைகள்: ஒரே ஒரு வீடியோவில் திடீர் திருப்பம்

பசிக்கொடுமையால் குழந்தைகள் மணலை அள்ளி சாப்பிட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகியதை அடுத்து அந்த குழந்தைகளுக்கு தற்போது நல்வாழ்வு கிடைத்துள்ளது 

ஆர்மி கேண்டினுக்குள் நுழைந்த காட்டு யானை..!

மேற்குவங்கத்தில் ராணுவ கேண்டீனுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை விரட்டியடிக்கப்பட்டது. சிலபாடா வனப்பகுதியை ஒட்டியுள்ள ஹசிமாராவில் ராணுவ வீரர்களுக்கான கேண்டீன் உள்ளது

என் மனைவி தீவிரவாதி..! டெல்லி விமான நிலையத்தை அதிரவைத்த பீஹார் இளைஞர்

சென்னையில் பிரபல தோல் தொழிற்சாலை நடத்தி வருபவர் நஸ்ருதீன். இவருடைய சொந்த ஊர் பீஹார் ஆகும். இவர் தன்னுடைய தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த சபீனா என்ற பெண்னை காதலித்தார்.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உதவினால் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி...! மோடியின் ஆஃபர்.

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க உதவினால் தனது மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாக மோடி கூறியதை தான் நிராகரித்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்...