'சூர்யா மேல் ஏன் இவ்வளவு வன்மம்'.. ரசிகரின் கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் அசத்தல் பதில்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா மேல் ஏன் இவ்வளவு வன்மம் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த அசத்தல் பதில் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூர்யா திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாகி, அவர் நடித்த படத்தை காலி செய்வதையே முழு நேர தொழிலாக பலர் வைத்துள்ளனர்.
’கங்குவா’ திரைப்படத்தின் போது இது மிகப்பெரிய அளவில் நடந்த நிலையில், தற்போது ’ரெட்ரோ’ படத்தின் போதும் பரவலாக நடந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் ’ரெட்ரோ’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் தியேட்டர் ஒன்றுக்கு விசிட் செய்த போது, ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், சூர்யா சார் மேல் ஏன் இவ்வளவு வன்மமாக இருக்கிறார்கள், அவர் நம்ம மக்களுக்கு நல்லது செய்வதிலும் சரி, குழந்தைகளை படிப்பதற்கு உதவி செய்வதிலும் பல உதவி செய்கிறார். ஆனால் அவரது படம் வரும்போது மட்டும் ஒவ்வொரு தடவையும் ஏன் இவ்வளவு வன்மம் இருக்கிறது என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ், “சூர்யா சார் பெயர் சொன்னவுடன் எவ்வளவு பவர் பாருங்க. இதெல்லாம் தூசி மாதிரி விட்டு தள்ளுங்க” என்று கூறினார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
During #Retro theatre visit !!
— AmuthaBharathi (@CinemaWithAB) May 12, 2025
Fan: #Suriya sir mela yen ivlo Vanman. Why many are spreading hatred whenever his film releases❓#Karthiksubbaraj: Suriya Sir Peru Sonnadhuke Evlo Power Parunga❤️🔥. Idhellam Dhoosi Mari Vittu Thalunga✌️ pic.twitter.com/AoEyNUpNvK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments