'சூர்யா 44' படத்தை இயக்குகிறேன்: மாஸ் இயக்குனரின் அதிரடி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,March 28 2024]

நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் ’சூர்யா 44’ படமாக உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ள நிலையில் தற்போது இணையத்தில் இது குறித்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவருடைய 44வது படத்தை நான் இயக்குகிறேன் என மாஸ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

’கங்குவா’ படத்திற்கு பிறகு சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ’புறநானூறு’ என்ற படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த படம் தாமதம் ஆகும் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. அதேபோல் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் பிஸியாக வெற்றிமாறன் இருப்பதால் ’வாடிவாசல்’ திரைப்படமும் கால தாமதம் ஆகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சூரியா அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இயற்கையான முறையில் கருத்தரிப்பு முறையை மேற்கொள்ள பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பற்றி டாக்டர் நிவேதிதா காமராஜ் விளக்கம்.

கருத்தரிப்பு சிகிச்சையில் ஏதாவது பக்க விளைவுகள் இருக்கின்றனவா என பல ஆய்வுகள் மேற்கொண்டபோது அப்படி எதுவும் இல்லை என்பதே தெரிய வந்த உண்மை...

குக் வித் கோமாளி தொகுப்பாளர்கள்.. ரக்சன், மணிமேகலைக்கு இவ்வளவு சம்பளமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வைத்து கோமாளி என்ற நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்து வரும் மே மாதம் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ள நிலையில் ஏற்கனவே இரண்டு புரமோ வீடியோ வெளியாகியது

என்ன கிளாமரில் இப்படி இறங்கிட்டாங்க.. பிக்பாஸ் மதுவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

பிக் பாஸ் சீசன் ஐந்து நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட மது, கிளாமரில் கலக்கிய போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'கோட்' படத்தில் ஆக்சன் காட்சிகளா? பாக்ஸிங் பழகிய மீனாட்சி சவுத்ரி.. வைரல் புகைப்படங்கள்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக  நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சினேகா, லைலா, பார்வதி மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர்

சித்தார்த் உடன் திருமணம் நடந்தது உண்மையா? அதிதிராவ் ஹைத்ரியின் ஒரே ஒரு வார்த்தையில் பதில்..!

நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைத்ரியை நேற்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்தி