close
Choose your channels

தனது போட்டியாளரையே ஹீரோவாக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்.. யார் அந்த மாஸ் நடிகர்..!

Thursday, April 24, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான ’ரெட்ரோ’ திரைப்படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதே தேதியில் ரிலீஸ் ஆகும் இன்னொரு படத்தின் ஹீரோதான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படத்தின் நாயகன் என்று கூறப்படுவது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மே ஒன்றாம் தேதி தமிழில், ’ரெட்ரோ’ மற்றும் ’டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதே தேதியில், நானி நடித்த ’ஹிட் 3’ திரைப்படமும் வெளியாகிறது. இந்த படங்களின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நானும் சமீபத்தில் நானி அளித்த பேட்டியில், "கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

"எனக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் ரொம்ப பிடிக்கும். அவர் படங்களை கையாளும் விதம் அருமையாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். சில கதைகளை நாங்கள் இருவரும் பேசி வருகிறோம்," என்றும் அவர் கூறியுள்ளார். மே 1ஆம் தேதி ’ரெட்ரோ’, ‘ஹிட் 3’ ஆகிய இரு படங்கள் வெளியானாலும், இரு படங்களும் வெற்றி பெறும் என நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில், ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய கார்த்திக் சுப்புராஜ், அடுத்ததாக தெலுங்கு பக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment