கார்த்திக் சுப்புராஜின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,December 07 2019]

விஜய் சேதுபதி நடித்த பீட்சா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதன்பின்னர் ஜிகர்தண்டா, இறைவி, மெர்க்குரி மற்றும் பேட்ட ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் தனுஷ் நடித்துவரும் சுருளி என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் தயாரிப்பில் ’மேயாதமான்’ என்ற திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருடைய இன்னொரு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் இண்டி’ என்ற நிறுவனத்தின் முதல் படம் தற்போது தயாராகி வருகிறது

இந்த படத்தின் டைட்டில் ’அல்லி’ என்று சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பிரபல இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். சனல்குமார் சசிதரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் இம்மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

வெங்காயம் திருடிய நபர்.. கட்டி வைத்து அடித்த வியாபாரிகள்.

புதுச்சேரியில் உள்ள சந்தையில் வெங்காயம் திருடிய நபரை அடித்து உதைத்து போலீசில் வியாபாரிகள் ஒப்படைத்தனர்

மருத்துவ செலவிற்கு பணமில்லை: நோயுற்ற மனைவியை உயிரோடு புதைத்த கணவன்

மனைவிக்கு வந்த நோய்க்கு சிகிச்சை செய்ய பணம் இல்லாததால் மனைவியை உயிரோடு புதைத்த கணவன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது 

இரண்டு வருட பகையை தீர்த்த விராத் கோஹ்லி!

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை ஏர்போர்ட்டில் டான்ஸ் ஆடி பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி பட நாயகி!

மும்பை ஏர்போர்ட்டில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே திடீரென டான்ஸ் ஆடியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வைரலாகும் வதந்திக்கு விக்ரம் படகுழுவினர் வைத்த முற்றுப்புள்ளி

விக்ரம் நடிப்பில் 'இமைக்காநொடிகள்' அஜய் ஞானமுத்து இயக்கி வரும் 'விக்ரம் 58' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.