close
Choose your channels

ஜிவி பிரகாஷூக்காக கார்த்திக் சுப்புராஜ் செய்த உதவி: இணையத்தில் வைரல்

Tuesday, August 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படத்தின் பாடல் ஒன்றை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு செய்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதோடு அவர் வெளியிட்ட பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்த திரைப்படங்களில் ஒன்று ’ஜெயில்’. பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய இந்த திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ், அபர்நதி, நடிகை ராதிகா சரத்குமார், நந்தன் ராம், பசங்க பாண்டி ரவிமரியா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ’பத்து காசு’ என்ற பிரெண்ட்ஷிப் ஆந்த்தம் பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த பாடலை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ’பத்து காசு இல்லைன்னாலும் நான் பணக்காரண்டா’ என்று தொடங்கும் இந்த பாடலை ஜிவி பிரகாஷ்குமார் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ், இந்த பாடலை வெளியிட்டதில் மகிழ்ச்சி என்றும் வசந்தபாலன் அவர்களுடைய இந்த படத்தை திரையில் பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos