close
Choose your channels

'சீயான் 60' படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்

Tuesday, June 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் வரும் 18ம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் இயக்கி வரும் மற்றொரு திரைப்படமான ’சியான் 60 படம்’ குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார்.

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோர் முதல் முதலாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் ’சியான் 60’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’பபூன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில் ’இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் விக்ரம் மற்றும் வாணிபோஜன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபிசிம்ஹா, வாணிபோஜன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.