close
Choose your channels

பிரபல நடிகர் முன்பு 'தாமரை' பாட்டு பாடி ஓட்டு கேட்ட தமிழிசை

Friday, April 5, 2019 • தமிழ் Comments

தூத்துகுடி தொகுதியில் கனிமொழி மற்றும் தமிழிசை ஆகிய இரண்டு ஸ்டார் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் கார்த்திக் தற்போது தூத்துகுடி தொகுதியில் தமிழிசைக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:

நாம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நாடு முன்னேற வேண்டும். அப்படி நடக்க வேண்டும் என்றால், நாம் நல்லவரை தேர்வு செய்ய வேண்டும். நாட்டை நேசிப்பவர்களை தேர்வு செய்ய வேண்டும். நமது முன்னோர்கள் நீங்க எல்லாம் கொள்ளையடிப்பதற்காகவா போராடி நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள்? என்று பேசினார்.

பின்னர் பேசிய தமிழிசை, 'தூத்துக்குடி வரை வந்து எனக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த சகோதரர் மற்றும் நண்பர் கார்த்திக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தாமரைக்கு வாக்கு கேட்க வந்திருப்பதற்கு அவர் மிக பொருத்தமானவர். ஏனெனில் தமிழகத்தில் தாமரையை அவர் ஏற்கனவே மலர செய்தவர். எப்படி என்றால், சினிமாவில் 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' என்ற பாடல் மூலம் தாமரையை மலரச் செய்தவர்தான் நடிகர் கார்த்திக் என்று தமிழிசை பேசினார்.

கார்த்திக் நடித்த முதல் படமான 'அலைகள் ஓய்வதில்லை' என்ற படத்தில் இடம்பெற்ற 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' என்ற பாடல் மிக பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz