'விக்ரம் 60' படத்திற்கான லொகேஷனை முடிவு செய்த கார்த்திக் சுப்புராஜ்!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளனர். விக்ரமின் 60வது படமான இந்த படம் ஒரு கேங்க்ஸ்டர் படம் என்றும் விக்ரம் இந்த படத்தின் வில்லன் வேடத்திலும் துருவ் விக்ரம் இந்த படத்தின் கதாநாயகனாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதை அடுத்து விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் கொடைக்கானலில் லொகேஷன் பார்த்து முடிவு செய்து விட்டதாகவும் விரைவில் விக்ரம், துருவ் விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் உள்பட படக்குழுவினர் கொடைக்கானல் செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 1ம் தேதி முதல் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பும் அங்கு நடத்த கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உலகிலேயே மிக குறைந்த விலையில் கொரோனா பரிசோதனை கருவி… WHO வின் புதிய அறிவிப்பு!!!

பொருளாதார கட்டமைப்பில்லாத மற்றும் மருத்துவக் கட்டமைப்பு குறைவாக இருக்கும் நாடுகளில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தவும் விரைவுப்படுத்தவும் இயலாத நிலைமை இருந்து வருகிறது.

தமிழக பாஜக பொதுச்செயலாளருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!!!

தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவனுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மசாஜ் செய்ய வந்த விஞ்ஞானி கடத்தல்: பிக்பாஸ் பெண் போட்டியாளர் கைது!

மசாஜ் செய்ய வந்த விஞ்ஞானியை கடத்தி வைத்துக் கொண்டு அவருடைய மனைவியிடம் பணம் கேட்டு மிரட்டிய பிக்பாஸ் பெண் போட்டியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

யூடியூபில் ஆபாச விமர்சனம்: அடித்து உதைத்த பெண்களால் பரபரப்பு

பெண்களை ஆபாசமாக விமர்சனம் செய்து யூடியூபில் வீடியோ பதிவு செய்த ஒருவரை மூன்று பெண்கள் இணைந்து அடித்து உதைத்த வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 

மதுரை ஐகோர்ட்டில் திடீரென மனுதாக்கல் செய்த நாகர்கோயில் காசி: பரபரப்பு தகவல்!

தன் மீதான வழக்கில் தனக்கு ஆதரவாக வாதாட வக்கீல்கள் யாரும் இல்லாததால் தனக்கு சட்ட உதவி கிடைக்கவில்லை என்றும் எனவே தன் மீதான வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்