close
Choose your channels

'ரெட்ரோ' படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்.. செம்ம விருந்து காத்திருக்கு..!

Friday, April 11, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த 'ரெட்ரோ' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளது.

இந்த நிலையில், படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சற்றுமுன் தனது சமூக வலைதள தளத்தில் ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், 'ரெட்ரோ' படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஒன் சாங்' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த பாடலை, சித்ஸ்ரீராம், ஷான் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடியுள்ளதாகவும், பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த பாடல், ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களைப் போல் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment