close
Choose your channels

உலகத்திலேயே சிறந்த பேச்சாளர் பணம் தான்: கருணாஸின்  'ஆதார்' டிரைலர்

Saturday, April 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவேளைக்கு பிறகு கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ’ஆதார்’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு சாதாரண அப்பாவி போலீசில் சிக்கிக் கொண்டால் அவர் எந்த அளவுக்கு சிரமப்படுவார், கொடுமைப் படுத்தப்படுவார், அலைக்கழிக்கப்படுவார் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் இந்த டிரைலரில் பார்க்க முடிகிறது. கருணாஸ் இந்த படத்தில் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். இனியா மற்றும் ரித்விகாவுக்கு வித்தியாசமான கேரக்டர்.

இந்த படத்தின் ஒவ்வொரு வசனங்களும் போலீஸின் அதிகாரம் மற்றும் அப்பாவி மக்களின் அவலத்தை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது. குறிப்பாக ’இந்த உலகத்திலேயே மிகப் பேச்சாளர்பணம் தான்’ என உமா ரியாஸ்கான் பேசும் வசனம் இந்த படத்தின் கதையை புரிந்து கொள்ள வைக்கின்றது.

ராம்நாத் பழனிகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.