கருணாஸ் நடித்த 'ஆதார்' ரிலீஸ் தேதி அரிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,August 24 2022]

நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்த ‘ஆதார்’ என்ற படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஆதார்’ . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ஒரு அப்பாவி போலீசில் சிக்கிக் கொண்டால் அவர் எந்த அளவுக்கு சிரமப்படுவார், கொடுமைப் படுத்தப்படுவார், அலைக்கழிக்கப்படுவார் என்பதை விளக்கும் கதை அம்சம் கொண்ட திரைப்படம் தான் ‘ஆதார்’.

கருணாஸ், இனியா, ரித்விகா, உமா ரியாஸ் உள்பட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர். ராம்நாத் பழனிகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் ‘ஆதார்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

More News

 'காபி வித் காதல்' படத்தின் 'நாளைய பொழுது' பாடல்: மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர் யார்?

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான  'காபி வித் காதல்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

சிம்புவின் வெந்து தணிந்தது காடு: ரிலீசுக்கு 20 நாட்கள் இருக்கும் நிலையில் தொடரும் படப்பிடிப்பு!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த 4 நட்சத்திரங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அதிகாரபூர்வமாக தொடங்கியது என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில்,

வெற்றிமாறனின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்!

வெற்றிமாறன் இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தில் பிரபல இயக்குனர் ராஜீவ் மேனன் இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

'இந்தியன் 2' படத்தின் இரண்டாவது பூஜை: வைரல் புகைப்படம்!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் இரண்டாவது பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.