இது ஆந்தாலஜி படம் இல்லை....! படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு....!

இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் தான், கசடதபற’. இப்படத்தை பிரபல இயக்குனர் சிம்புதேவன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் வெங்கட் பிரபு, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், ரெஜினா,பிரியா பவானி ஷங்கர், விஜயலட்சுமி,பிரேம்ஜி உள்ளிட்ட பிரம்மாண்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் ஹைப்பர்-லிங் திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து சிம்புதேவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு துவங்கியுள்ளது. மேலும் இப்படத்தில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சி எஸ், ஷான் ரோல்டன், பிரேம்ஜி உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் சமூகவலைத்தளங்களில் பெருமளவில் வரவேற்பு பெற்றது. வருகின்ற ஆகஸ்ட் 27-ல், ஓடிடி தளமான சோனி லைவ்-ம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை டுவிட்டரில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மறுபடியும் மறுபடியும் சொல்றோம், இது ஆந்தலாஜி படம் இல்லை என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த முக்கிய அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சமந்தாவுக்கு கிடைத்த சூப்பர் விருது: திரையுலகினர் வாழ்த்து!

ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்திய திரைப்பட விழாவில் பல தமிழ் திரைப்படங்கள் கலந்து கொண்டன என்பது தெரிந்ததே. குறிப்பாக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்த சூர்யா சிறந்த

பூஜா ஹெக்டே பகிர்ந்த 'பீஸ்ட்' படப்பிடிப்பு புகைப்படம்: இணையத்தில் வைரல்

தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்புக்காக தயாராகும் புகைப்படம் ஒன்றை இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே

கணவருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற சூப்பர் ஸ்டார் மகள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சுப்பிரமணியன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

விஜய் ஜோடியாக மகேஷ்பாபு மனைவி: திடீரென ஏற்பட்ட திருப்பம்!

தளபதி விஜய் நடித்த படம் ஒன்றில் மகேஷ் பாபுவின் மனைவி நடிக்க ஒப்பந்தம் ஆகி அதன் பின்னர் திடீரென விலகி உள்ளதாக நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

நான் இவ்வளவு தான் படிச்சிருக்கேன்.....! ரசிகர்களுக்கு பதில் கூறிய ஆல்யா மானஸா....!

முதன்முதலாக கலைஞர் டிவியில் வெளியான "மானாட மயிலாட" என்ற டான்ஸ் நிகழ்ச்சி மூலம், தொலைக்காட்சியில் அறிமுகமானவர்  தான் நடிகை ஆல்யா மானஸா