close
Choose your channels

'கசடதபற' படத்தில் 5 ஹீரோ, 3 ஹீரோயின்கள் அறிவிப்பு!

Sunday, May 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கசடதபற' திரைப்படத்தில் ஆறு கதைகள் இருப்பதாகவும், இந்த படத்தில் ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள் பணிபுரியவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து அவர்களுடைய பெயர்களும் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோக்களாக நடிக்கும் ஐந்து நடிகர்கள் மற்றும் ஹீரோயின்களாக நடிக்கும் 3 நடிகைகளின் பெயர்கள் தற்போது வெளிவந்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்து தெரிய வந்துள்ளது. இதன்படி இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷான், சாந்தனு, வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் ரெஜினா, பிரியா பவானிசங்கர் மற்றும் விஜயலட்சுமி ஆகிய நடிகைகளும் நடிக்கவுள்ளனர்.

ஐந்து ஹீரோக்கள், மூன்று ஹீரோயின் உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.