close
Choose your channels

'கசடதபற' படத்தின் ஆறு ஒளிப்பதிவாளர்கள் இவர்கள் தான்

Wednesday, May 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கசடதபற' திரைப்படத்தின் ஆறு படத்தொகுப்பாளர்கள் அந்தோணி, காசி விஸ்வநாதன், ராஜா முகமது, விவேக் ஹர்ஷன், ரூபன், பிரவீண் கே.எல் ஆகியோர்கள் என்பதை நேற்று பார்த்தோம். தற்போது இந்த படத்தில் பணிபுரியவுள்ள ஆறு ஒளிப்பதிவாளர்களின் பெயர்களை பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன்படி இந்த படத்தில் பாலசுப்பிரமணியம், விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் மற்றும் ஆர்.டி.ராஜசேகர் ஆகியோர் ஒளிப்பதிவாளர்களாக பணிபுரியவுள்ளனர். மேலும் இந்த படத்தில் பணிபுரியும் ஆறு இசையமைப்பாளர்களின் பெயர்களை பிரபல இசையமைப்பாளரும் வெங்கட்பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் நாளை வெளியிடவுள்ளார்.

'கசடதபற' படத்தில் ஆறு ஹீரோக்கள், ஆறு ஹீரோயின்கள், ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள் பணிபுரியவுள்ளனர் என்பதும் இந்த படத்தில் இடம் ஆறு கதைகள் இடம்பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.