close
Choose your channels

'காசேதான் கடவுளடா' பாடல் படத்தில் எப்போது? 'துணிவு' படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்!

Tuesday, January 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் இந்த மூன்று பாடல்களும் எந்தெந்த பகுதியில் படத்தில் இடம்பெற இருக்கிறது என்ற தகவல் தற்போது படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்துள்ளது.

அனிருத் பாடிய ’சில்லா சில்லா’ என்ற பாடல் அஜித்தின் அறிமுக காட்சியில் இடம்பெறும் பாடலாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதேபோல் ’கேங்க்ஸ்டா’ என்ற பாடல் வங்கி கொள்ளை காட்சிகளின் போது பின்னணியாக ஒலிக்கும் என்றும் ’காசேதான் கடவுளடா’ என்ற பாடல் படம் முடிவடைந்து டைட்டில் போடும்போது இடம்பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மூன்று பாடல்களுமே ஏற்கனவே மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடலை திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், மஞ்சுவாரியர், பகவதி பெருமாள், சமுத்திரக்கனி, பிரேம்குமார், சிபி, ஜிபி முத்து, அமீர், பாவனி ரெட்டி உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை போனிகபூர் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகிய இந்த படம் அஜித்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.