close
Choose your channels

தினேஷ் கார்த்திக்கை 'மெர்சல்' பாடல் மூலம் பாராட்டிய நடிகை

Monday, March 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வங்கதேச அணிக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்து இந்தியாவின் ஹீரோ ஆனார் தமிழகத்தை சேர்ந்த தினேஷ்கார்த்தி. அவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தமிழர் ஒருவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருவது ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படும் வகையில் உள்ளது

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற பாடல் ஆளப்போறான் தமிழன்' படத்தின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி நடிகை கஸ்தூரி, தினேஷை புகழ்ந்து தள்ளியுள்ளார்,. அவர் தனது சமூக வலைத்தளத்தில் '"ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே' என்று குறிப்பிட்டு தினேஷை வாழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் தனது இன்னொரு டுவீட்டில் '''தினேஷ் கார்த்திக், ஐ லவ் யூ. சென்னை உங்களை விரும்புகிறது. தமிழ்நாடு உங்களை விரும்புகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உங்களை விரும்புகிறது. இந்தியா உங்களை விரும்புகிறது. ஏன் இலங்கையும் உங்களை விரும்புகிறது. பாவம் வங்கதேச பாம்பாட்டக்காரார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.