இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நிர்பயா தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி

  • IndiaGlitz, [Saturday,May 06 2017]

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவகல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்து ஒன்றில் ஆறு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் மரணம் அடைந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர்களில் ஒருவர் மைனர் என்பதால் அவரை சிறார் சிறைக்கு தள்ளிய நீதிமன்றம், மற்ற ஐந்து பேர்களுக்கும் மரண தண்டனை விதித்தது.
இதில் ராம்சிங் என்பவர் சிறையிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீதி நான்கு பேர்களின் மரண தண்டனையை நேற்று சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு நிர்பயாவின் பெற்றோர் உள்பட அனைவரும் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி கூறியபோது, 'கிட்டத்தட்ட 5 வருடத்திற்குப் பிறகு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு மிருகம் மட்டும் சுதந்திரமாக அடியெடுத்து வைத்துள்ளான். அதை மட்டும்தான் என்னால் ஏற்க முடியவில்லை. இந்த தீர்ப்பு மிக மிக சக்தி வாய்ந்த தொடக்கமாக இருக்க வேண்டும். நிர்பயாவின் பெற்றோரின் கண்ணீரிலிருந்து சட்டப் புரட்சி தொடங்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை' என்று கூறியுள்ளார்.

More News

தமிழ், தெலுங்கை அடுத்து வங்க மொழியிலும் சாதனை புரிந்த ஜெயம் ரவி படம்

கடந்த 2015ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் 'தனி ஒருவன்.

நடிகர் சங்க கட்டிடம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தில் 33 அடி சாலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி குடியிருப்பு வாசிகளான அண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கன் ஆகியோர் இணைந்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்திருந்தோம்.

நயன்தாராவின் திடீர் போர்ச்சுக்கல் பயணம் ஏன்?

கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்த நிலையில் நேற்றிரவு அவர் திடீரென போர்ச்சுக்கல் கிளம்பி சென்றார். அவர் நீண்டகாலமாக தாமதமாகிக்கொண்டிருந்த தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக போர்ச்சுக்கல் சென்றுள்ளதாக தெரிகிறது...

ஒரே மாதத்தில் முடிவடையும் ஜீவா படத்தின் படப்பிடிப்பு

அட்லி தயாரிப்பில் ஜீவா நடித்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு 'கீ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது...

பாலியல் தொழிலை விருப்பத்துடன் செய்தால் தவறில்லை. குஜராத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாலியல் தொழில் செய்ய பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டால் மட்டுமே அது தவறு என்றும், ஒரு பெண் விரும்பியே பாலியல் தொழில் செய்தால் அது தவறு இல்லை என்றும், அவ்வாறு விரும்பி பாலியல் தொழில் செய்யும் பெண்ணையும் அவரது வாடிக்கையாளர்களையும் போலீசார் கைது செய்ய கூடாது என்றும் குஜராத் ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது...