close
Choose your channels

விஜய் ஆண்டனி படத்தில் கஸ்தூரியின் புதிய அவதாரம்

Sunday, March 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடிப்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தமிழரசன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் முதல் படம் இதுதான் என்பதும் இந்த படத்தில் இயக்குனர் மோகன்ராஜாவின் மகன் ஒரு முக்கிய வேடத்தில் அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகை கஸ்தூரி நடித்து வருவது தெரிந்ததே. தற்போது இவர் இந்த படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்து வருவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கஸ்தூரி கூறுகையில், 'நான் இந்த படத்தில் ஒரு நேர்மையான டாக்டர் கேரக்டரில் நடித்து வருகிறோம். ஹீரோவுக்கு மெடிக்கல் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை விளக்கும் ஒரு கேரக்டர். திரைக்கதையில் எனக்கு முக்கியத்துவம் இருப்பதால் இந்த படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, பிரணவ் மோகன், யோகிபாபு, பாண்டியராஜன், மகத், மதுமிதா, கஸ்தூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எஸ்.என்.மூவீஸ் தயாரித்துள்ளது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.