close
Choose your channels

"அணில் பாலாஜி" என்று கிண்டலடித்து பதிவிட்ட 80'ஸ் நடிகை....! இருந்தாலும் இவங்களுக்கு தைரியம் தான்ப்பா....!

Friday, June 25, 2021 • தமிழ் Comments

தமிழக அமைச்சரை "அணில் பாலாஜி" என்று கலாய்த்து, நடிகை கஸ்தூரி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

சட்டமன்றத்தில் மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியது தான், 2 நாட்களாக சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கு அணில்கள் தான் காரணம் என்று இவர் பேசியிருந்தார். இதை கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இவர்களின் வரிசையில் பிரபல நடிகை கஸ்தூரியும் தற்போது இணைந்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து, நடிகை கஸ்தூரி டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

"செல்லூர் ராஜு வின் விஞ்ஞான அறிவுக்கு விசிறியாக இருந்தவரெல்லாம் இப்போ செந்தில் பாலாஜிக்கு மாறிவிட்டார்.
கள்ளிக்கு பிள்ளை சாக்கு, கரண்ட் கம்பிக்கு அணில் பிள்ளை சாக்கு !
அது என்ன அணிலா அணில் கும்ப்ளே வா ஸ்டம்ப்பை தூக்குற மாதிரி கரண்ட் கம்பியை தாக்குறதுக்கு !
அணில் என்ன ராம்குமாரா கரண்ட் கம்பியை கடிக்கறதுக்கு ?
அணில் என்ன அவாளா ? அநியாயமா பழிபோடறதுக்கு?
கருப்புச்சட்டை காக்காவை விட்டுட்டு ராமருக்கு உதவிய அணிலை டார்கெட் பண்ணுறாங்க ,
எவ்வளோ பெரிய (யார்) அரசியல் பாருங்க"
என்று பதிவிட்டு, "திராவிட அபிமானிகள் இதற்கு கமெண்ட் செய்யவும்" என்றும் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து "இது நகைச்சுவைக்காக மட்டுமே, திராவிட பற்றாளர்கள் இதைபார்த்துக்கொண்டு சீரியஸாக எடுக்கவேண்டாம்" என்றும் பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரியின் இந்த பதிவிற்கு பலர் ஆதரவு கருத்துக்களையும், பலர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

 

Get Breaking News Alerts From IndiaGlitz