மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை; கஸ்தூரி

நடிகை கஸ்தூரி அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் ஸ்டாலின் கூறிய ஒரு கருத்தை விமர்சித்து தற்போது மீண்டும் நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.

சமீபத்தில் திமுக பெற்ற வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அதில், 'இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது என்றும், இனி வரும் காலம், மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கபூர்வ அரசியலுக்கான காலம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் எந்தவொரு மாநிலத்தையும் அலட்சியம் செய்துவிட முடியாது என்றும், அனைத்து தேசிய இனங்களையும் ஆதரித்து அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள நடிகை கஸ்தூரி, இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல - மு.க.ஸ்டாலின் அட ஆமாம், கோவா குஜராத் கர்நாடகம் ஒடிஷா வடகிழக்கு காஷ்மீர், வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலங்கள் , ஏன், ஆந்திராவும் இந்தியாதான் ! இதை திரு ஸ்டாலின் தானாகவே மனமுவந்து சுட்டிக்காட்டுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கிண்டலுடன் பதிவு செய்துள்ளார்.
 

More News

மோடி பதவியேற்பு விழாவில் கமல்ஹாசனுக்கு அழைப்பு! கலந்து கொள்வாரா?

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் வரும் 30ஆம் தேதி பிரதமரக நரேந்திரமோடி பதவியேற்கவுள்ள நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தில்

'இது ஆண்மையில்லாத்தனம்': விஜய்சேதுபதி படக்குழுவை கடுமையாக விமர்சித்த இளையராஜா

சொந்தமாக இசையமைக்க முடியாமல் என்னுடைய பாடல்களை பயன்படுத்தியது அவர்களுடைய ஆண்மையில்லாத்தனத்தை காண்பிப்பதாக இசைஞானி இளையராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் வீட்டிற்கு காவி வேட்டி அனுப்பிய பாஜகவினர்!

நடிகர் விஜய் வீட்டிற்கு பாஜகவினர் காவி வேட்டி அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர், இசையமைப்பாளர் என இரண்டு துறைகளில் வெற்றிகரமாக பயணம் செய்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ், அவ்வப்போது சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்! 

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் அபார வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்கவுள்ளார்.