close
Choose your channels

திருமணத்திற்கு 50, துக்கத்திற்கு 20, படப்பிடிப்புக்கு மட்டும் 60ஆ? கஸ்தூரி கேள்வி

Sunday, May 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் 500க்கும் மேற்பட்டவர்கள், 600க்கும் மேற்பட்டவர்கள் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் ஒன்றுகூட சென்னை மக்களுக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழக அரசு நேற்று சின்னத்திரை தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது என்பதும், சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்று தமிழக முதல் அமைச்சர் அறிவித்திருந்தார் என்பதும் தெரிந்ததே. இதற்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் தரப்பில் நன்றி கூறப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்

திருமணம் என்றால் 50 பேர்கள் மட்டுமே அனுமதி, துக்க நிகழ்ச்சிக்கு என்றால் 20 பேர்கள் மட்டுமே அனுமதி என்று நிபந்தனை விதித்துள்ள தமிழக அரசு பொழுதுபோக்கு அம்சமான சின்னத்திரை படப்பிடிப்புக்கு மட்டும் 60 பேர்கள் வரை அனுமதி அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

சின்ன திரை படப்பிடிப்புகளுக்கு 60 பேர் வரை பணியாற்றலாம் என்று இன்று தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் சின்ன திரையை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளுக்கும் இது இனிப்பான செய்தியாக இருந்தாலும் இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து கலைத்துறையினர் மிக கவனமாக நிதானமாக செயல்படுவது அவசியம்.

எங்கோ யாருக்கோ என்ற நிலைமை போய் இதோ இன்று எங்கள் தெருவில் கொரோனா தொற்றி விட்டது. பால் விநியோகிப்பவர் பணிப்பெண் இப்படி பல உருவமெடுத்து எங்கள் குடியிருப்பின் வாசல் கதவை தட்டி கொண்டிருக்கிறது. இது எனக்கு மட்டுமில்லை, எல்லாருக்கும் இதே நிலைதான்.

தமிழகத்தில் கொரோனா மிக வேகமாக பரவும் நிலையில், அத்தியாவசிய சேவைகளை கூட மிக கவனமாக கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், மணந்தால் 50 பேர் மட்டும், இறந்தால் 20 பேர் மட்டும் என்ற கடுமையான கட்டுப்பாடு உள்ள நேரத்தில், பொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு தளர்வு எதற்கு, எதன் அடிப்படையில் என்று மக்கள் கண்டிப்பாக கேட்பார்கள்.

நான் இப்பொழுது ஒரு தெலுங்கு தொலைக்காட்சி தொடரில் பணியாற்றி வருகிறேன். சொந்த அனுபவத்தில் சொல்கிறேன், ஷூட்டிங் ஸ்பாட்டில் கொரோனாவை தடுப்பது, சமூக இடைவெளி பாதுகாப்பு இதெல்லாம் மிக பெரிய சவால்கள். 60 பேர் தினமும் கூடினால் கண்டிப்பாக தொற்று அபாயம் உண்டு. ஏற்கனவே கலைஞர்களை பூதக்கண்ணாடி வைத்து விமர்சிக்கிறார்கள். சினிமாவால் டிவியால் சமூகம் பாழாகுது என்ற குற்றசாட்டு ஏற்கனவே உள்ளது. இதில் ஷூட்டிங் செய்து கொரோனா வந்துவிட்டால் வேறு வினையே வேண்டாம். அப்புறம் மொத்தமாக மூடிவிட்டால் என்ன செய்வது?

தமிழகத்தில் கொரோனாவின் வீரியம் எப்பொழுது குறையும் என்று யாருக்கும் தெரியாது. இன்னும் ஒன்றிரண்டு மாதம் படப்பிடிப்புகளை தவிர்ப்பதே உசிதம், ஆனால் எல்லோருக்கும் அதற்கு பொருளாதாரம் இடம் கொடுக்காது. வயிற்றுப்பாட்டை பார்க்கவேண்டுமே! அதனால் எச்சரிக்கை எச்சரிக்கை கவனம் கவனம். மிகுந்த எச்சரிக்கை தொலைநோக்கு பார்வை, பொறுமை அவசியம்.

நடிகை கஸ்தூரியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos