ஆம்பள ஆம்பள என ஊளையிடுவதை தட்டி கொடுப்பதா? கஸ்தூரி கண்டனம்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும் இந்த நிகழ்ச்சியின் சில முக்கிய வீடியோக்களை அவ்வபோது விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றது. இதில் சில காட்சிகள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாத காட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கவின், சாண்டி, தர்ஷன், முகின் ஆகிய நால்வரும் ‘வி ஆர் த பாய்ஸ்’ என்ற பாடலை பாடிக்கொண்டிருக்கும் காட்சி உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகையும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்த வீடியோ ஒரு மோசமான ரசிப்புத்தன்மை கொண்டது. . நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? நம் இளைஞர்கள் சிறப்பானவர்களாக வரவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் நெட்டிசன்களின் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி பதிவு செய்யப்பட்டு வருகிறது.

More News

தம்பி நான் ஒரு சீன்ல்ல வர்றேன்: 'பிகில்' டிரைலரை பார்த்த பிளேயர்ஸ்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைத்து கொண்டிருக்கின்றது.

விஜய் அம்மாவை சந்தித்த 'பிக்பாஸ்' சீசன் 3 நடிகை

பிக்பாஸ் சீசன் 3 இதுவரை நடந்த சீசன்களில் இருந்து வித்தியாசமாக இருந்தது. இந்த சீசனின் வின்னராக முகின் இருந்தாலும் முகினின் வெற்றியை சக போட்டியாளர்களே கொண்டாடியது

'சிவா' படத்தில் நடிக்கும் முன் ரஜினியின் வழக்கமான 10 நாள் விசிட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க இருப்பதாகவும் இந்த பிரமாண்டமான படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரபூர்வமான

பாசம் மனசுக்குள் இருந்தால் போதும்: ரசிகனை நெகிழ வைத்த விஜய்

நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார் என்பதும், ரசிகர்களின் வீடுகளில் நடைபெறும் இன்பதுன்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்பதும் தெரிந்ததே

செக் மோசடி வழக்கு: விஜய் நாயகிக்கு கைது வாரண்ட்

விஜய் நடித்த 'புதிய கீதை' படத்தின் நாயகியும் பாலிவுட் நடிகையுமான அமிஷா பட்டேல் மீது பதிவு செய்யப்பட்ட செக் மோசடி வழக்கில் தற்போது அவருக்கு எதிராக கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது