close
Choose your channels

ஒரு எம்.பி நிச்சயம்: பாமகவு கூட்டணி குறித்து நடிகை கஸ்தூரி கருத்து

Tuesday, February 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக கூட்டணியில் பாமக ஏழு மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிங்களையும் தொகுதியும் பெற்றுள்ளது என்பதை சற்றுமுன் பார்த்தோம். கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் டாக்டர் ராமதாஸ், 'இது மக்கள் நலனில் அக்கறை கொண்ட வெற்றி கூட்டணி' என்று கூறினார்.

இந்த நிலையில் இந்த கூட்டணி குறித்து திமுக தலைவர்கள் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அரசியல்வாதிகள் குறித்து தனது டுவிட்டரில் நையாண்டியாக கருத்து கூறி வரும் நடிகை கஸ்தூரி இந்த கூட்டணி குறித்து கூறுகையில், 'எப்போதுமே பாமகவுக்கு NDA வில்தான் அதிக சீட்டு கிடைக்கும். BJP கூட்டணியில் போன முறை மிக அதிகமாக 8 சீட்டுக்கள் - வென்றது 1 மட்டுமே.  இந்த முறை வென்றாலும் வெல்லாவிட்டாலும் ஒரு MP பதவி நிச்சயம் . வேறு என்ன வேண்டும்? என்று கூறியுள்ளார். ஒரு மாநிலங்களவை தொகுதி கிடைத்ததையே அவர் 'வென்றாலும், வெல்லாவிட்டாலும் ஒரு எம்.பி' என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'PMK 4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக திமுக ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி புரட்சி பண்ணிரலாம். திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு? என்று பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.