உங்களுக்கு பிக்பாஸ்ல்ல நல்ல  எதிர்காலம்  இருக்கு: கஸ்தூரி ட்விட்டிற்கு கமல் கட்சி நடிகை பதிலடி..!

  • IndiaGlitz, [Tuesday,June 27 2023]

உங்களுக்கு பிக்பாஸ்ல நல்ல எதிர்காலம் இருக்கு என்று கமல் கட்சியில் சமீபத்தில் சேர்ந்த நடிகை வினோதினி குறித்து குறித்து நடிகை கஸ்தூரி ட்விட் போட்ட நிலையில் வினோதினி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் நடிகை வினோதினி பதிவு செய்த ட்விட் குறித்து நடிகை கஸ்தூரி கூறியபோது, ’கமல் சார் கட்சியில் சேர்ந்தது ஏதோ சேவைக்குன்னு நினைச்சா...இவங்க செய்யுற வேலைய பாருங்களேன், உங்களுக்கு பிக்பாஸ்ல்ல நல்ல எதிர்காலம் இருக்கு’ என்று பதிவு செய்திருந்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் நடிகை வினோதினி கூறியிருப்பதாவது: அந்தம்மா… அதுதான்… திராவிடர்களை திராவிடியாஸ்னு கூப்பிட்டு ட்விட்டர் வரலாறு படைத்த பெண்மணி… நான் ஏதோ சேவை செய்ய மய்யத்துல இணைஞ்சேனாம், ஆனா உமா கார்கி போன்ற தேச பக்தாள் போட்ட ட்வீட்டயெல்லாம் காண்பித்து அவாளுக்கு எதிரா வன்மம் பரப்புறேனாம்னு கதறினாரே… அம்மாடி.. நான் மக்களுக்கு சேவை செய்யப்போறேன்னு எப்போம்மா சொன்னேன்? மக்களுக்கு கண் இனைக்காமல் சேவை செய்ய நான் என்ன நரேந்திரவா? (விவேகானந்தரச்சொன்னேன்). அவங்களுக்கு என்ன தேவையோ அதை அவங்க பார்த்துக்குவாங்க. எல்லாரும் மழுங்கடிக்கப்பட்ட மாட்டு மூளைக்கொண்டவங்க இல்ல. என்னோட/எங்களோட/பலரோட முயற்சி ஒண்ணே ஒண்ணுதான்… நான் பிறந்த ஹிந்து மதத்த வெச்சு கேவலமா கேம் ஆடுற ஒரு க்ரூப் இருக்கே… யாருன்னு என் வாயால ஏன் சொல்லணும்… அவங்கள… fill in the blanks… (இதை நான் ருத்ரம் சமகம் விஷ்ணு சஹஸ்ரநாமம் சௌந்தர்ய லஹிரி கந்த சஶ்டி கவசம் அனைத்தும் படிக்கும் புரிந்துகொள்ள முயற்சிக்கும் அக்மார்க் ஹிந்துங்குற அடிப்படைலயே சொல்றேன்).

இதை செய்யுறதுக்கு மய்யத்துல இருக்கோமோ, மய்யத்து ஆபீஸ் வாசல்ல நிக்கிறோமோ, அறிவாலயத்துல இருக்கோமோ, 200 ரூ வாங்குறோமோ, கக்கூஸ் கழுவுறோமோ, எங்களுக்குள்ள அடிச்சிக்கிறோமோ, அதை நாங்க பார்த்துக்குறோம். நீங்கபோயி உங்க மதம் எப்படி எல்லா மதத்தவிடவும் சிறந்தது, பிரதமர் துவாபர யுகத்துல அமெரிகா சென்றிருந்தால் எப்படி புஸ்பகவிமானத்தில் சென்றிருப்பார்.. அன்றே சொன்னார் விசுவாமித்திரர் அப்படின்னு வாட்ஸாப் தகவல்கள ஷேர் பண்ணிட்டு, அடுத்த ஜென்ம புண்யத்துக்கு பூஜை புனஸ்காரத்துக்கு நடுவுல ட்விட்டர்ல ரெண்டு கெட்டவார்த்தைய கூசாம பேசிட்டு, ஒரு க்ளாஸ் கோமியம் குடித்துவிட்டு படுத்துத்தூங்குங்க. இன்றும் திராவிடர்களை திராவிடியாஸ் என்ற வார்த்தையைக்கொண்டு நீங்கள் அழைத்தது எவ்வளவு சாமர்த்தியமான வன்மச்செயல் மற்றும் வக்கிரத்தின் உச்சம் என்று நீங்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

ஜெய் ஜக்கம்மா. (எல்லாரும் ஒண்ணு சொல்லுறாங்க, அதான் நானும்…)

கஸ்தூரி, வினோதினி ஆகிய இருவரது ட்விட்டர் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.

More News

மகளுடன் க்யூட் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா.. ஆனாலும் குவியும் கண்டனங்கள்..!

நடிகை ஸ்ரேயா தனது மகளுடன் இருக்கும் கியூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் சொன்னாலும் சில ரசிகர்கள் அவரது

கமல்ஹாசனை அடுத்து வில்லனாகும் சிம்பு.. யாருடைய படத்தில் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன், பிரபாஸ் நடிக்க இருக்கும் 'புராஜெக்ட் கே' என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்றும் இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

25 ஆண்டுகளுக்கு பின்.. நடிகை ராதாவின் செம்ம ரொமான்ஸ் போட்டோஷூட்..!

25 ஆண்டுகளுக்கு பின்னர் கணவருடன் மொரிஷியஸ் செல்வதாக கூறியுள்ள நடிகை ராதா தனது கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. 

 ஹாலிவுட் ஸ்டைலில் போஸ்.. கண்டிப்பா சினிமாவுல சான்ஸ் கிடைச்சிடும்.. அஞ்சனா ரங்கன்  வீடியோ..!

 சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன்  ஹாலிவுட் ஸ்டைலில் போஸ் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து அவருக்கு கண்டிப்பாக விரைவில் சினிமாவில் சான்ஸ் கிடைத்து

மனைவியின் தகாத உறவு… காதலனின் கழுத்தை அறுத்து ரத்தத்தைக் குடித்த கணவன்!

கர்நாடக மாநிலத்தில் வசித்துவந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவியுடன் தனது நண்பனே தகாத உறவில் ஈடுபட்டு வந்ததை அறிந்து,